ஆண்மை அழிய வேண்டும் ஆண்மை திமிர் ஓழிய வேண்டும், ஆணும் பெண்ணும் சமமாக வாழ வேண்டும் என்று கூறிய பெரியார் மண்ணில் இருந்து கொண்டு பேசுகிறார் என்று எடப்பாடி பழனிசாமிக்கு திமுக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலுக்கான பரப்புரையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அணி சார்பாக போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நேற்றைய தினம் பரப்புரை மேற்கொண்டார்.அப்போது பேசிய அவர் தேர்தல் நேரத்தில் திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.
மேலும் தேர்தல் நேரங்களில் மட்டும் வாக்காளர்களை அடைத்து வைத்து உள்ளனர். ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கழித்த நிலையில் இன்னும் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை இந்த அரசு நிறைவேற்ற வில்லை என்று தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து‘ஆம்பளையாக இருந்தால் வாக்காளர்களை வெளியே விட்டு அவர்களை சந்தித்து வாக்கு சேகரியுங்கள்’ என கூறி இருந்தார்.இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் evks இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நேற்று திமுக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது எடப்பாடி பழனிசாமி பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.ஆண்மை அழிய வேண்டும் ஆண்மை திமிர் ஓழிய வேண்டும், ஆணும் பெண்ணும் சமமாக வாழ வேண்டும் என்று கூறிய பெரியார் மண்ணில் இருந்து கொண்டு கேட்கிறார். மேலும் தோல்வி பயத்தில் பேசுகிறார் என்று கூறிய அவர்,
ஜெயலலிதா மறைந்த பிறகு, எடப்பாடி பழனிசாமி பதவிக்காக மண்புழுவைப்போல் ஊர்ந்து சென்று சசிகலா காலில் விழுந்தாரே அதுதான் அவரின் ஆண்மையா… வேட்டியும், மீசையும்தான் ஆண்மை என்றால் நீங்கள் காலில் விழுந்த ஜெயலலிதாவும், சசிகலாவும் மீசை வைத்திருந்தார்களா?” பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பி உள்ளார்.