தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவின் சகோதரர் தேவராஜ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக உள்ளவர் சேகர் பாபு.இவரது சகோதரர் தேவராஜ் சென்னையில் ஓட்டேரி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.இந்த நிலையில் நேற்று இரவு அமைச்சர் ஷேகபாபுவின் சகோதரர் தேவராஜ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் தேவராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இது குறித்து காவல்துறையினர் முதல்கட்ட விசாரணையில், 63 வயதான அமைச்சர் சேகர்பாபுவின்,தேவராஜ் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தேவராஜ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவந்துள்ளது.மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து முழுமையான விசாரணைக்கு பிறகே தெரிய வரும்.
மேலும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு சகோதரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்த தொண்டர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமைச்சரின் வீட்டிற்கு முன்பு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் வரவழைக்கப்பட்டுக் கூடி இருந்த தொண்டர்களை அப்புறப்படுத்தி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.அமைச்சர் சேகர் பாபுவின் சகோதரர் தேவராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது குடும்பத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.