பரந்தூர் விமான (parandhur-airport)நிலைய திட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த திட்டம் அறிவிக்கப்பட்ட நாள் முதல் 13 கிராம மக்கள் விமான நிலையத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். பரந்தூரில் அரசு அமைக்க உள்ள விமான நிலையத்தை கைவிட்டு மாற்று பாதையில் செல்ல போராடி வருகின்றனர்.
சென்னையை ஆசியாவிலேயே முதலீடு செய்வதற்கான சிறந்த இடமாக மாற்றவும், 20,000 ரூபாய் மதிப்பீட்டில் பாரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
தற்போதுள்ள மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையமும், சென்னையிலிருந்து 70 கிமீ தொலைவில் உள்ள பரந்தூரில் உள்ள புதிய விமான நிலையமும் பெங்களூரு செல்லும் நெடுஞ்சாலையில் ஒரே நேரத்தில் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் “புதிய விமான நிலையத்திற்கு பொருத்தமான நான்கு இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அவற்றில், இந்திய விமான நிலைய ஆணையம் ஆய்வு செய்து, சாத்தியமான இடங்களாக பரிந்துரைத்த இரண்டு இடங்களில் ஒன்றான, பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் ,பரந்தூர் விமான நிலைய திட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று, பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னைக்கான இரண்டாவது விமான நிலையத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து பரந்தூரை சுற்றியுள்ள கிராம மக்கள் 50 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விமான நிலையம் அமைந்தால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இத்திட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னைக்கான இரண்டாவது விமான நிலையம் பரந்தூரில் அமைப்பதற்கான பணியில் தமிழ்நாடு அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில்,தனியாருக்கு தாரைவார்க்க உதவும் வகையில் மத்திய அரசின், “கிரீன்ஃபீல்டு விமான நிலைய” கொள்கையின் கீழ் பரந்தூர் விமான நிலையம் அறிவிக்கப்பட்டு உள்ளதாக கூறியுள்ளது.
வளர்ச்சித் திட்டங்களுக்கு விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதை அரசு தவிர்க்க வேண்டும் என்று நிலம் கையப்படுத்தும் சட்டத்தில் பிரிவு 10 கூறும் நிலையில்,பரந்தூர் விமான நிலையத்திற்காக கையகப்படுத்தப்பட உள்ள 4 ஆயிரத்து 563 ஏக்கரில், 3 ஆயிரத்து 246 ஏக்கர் விவசாயம் நிலம் என சுட்டுக்காட்டப்பட்டு உள்ளது.
இதனால், இத்திட்டத்திற்கு 13 கிராமங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.குறிப்பாக, ‘ஏகனாபுரம்’ கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளும், விவசாய நிலங்களும் கையகப்படுத்தப்பட்டு, அந்த கிராமம் இந்திய வரைபடத்தில் இருந்தே துடைத்து எறியப்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பரந்தூர் விமான நிலையம் வந்துவிட்டால் அதன் அருகே நிலங்களின் மதிப்பு பல மடங்கு அதிகரித்துவிடும் என்பதால்,அரசு கொடுக்கும் இழப்பீட்டு தொகை மூலம் எளிய மக்களால் அப்பகுதியில் நிலம் வாங்க முடியாது எனவும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், பரந்தூர் விமான நிலையம் வந்துவிட்டால் அதன் அருகே நிலங்களின் மதிப்பு பல மடங்கு அதிகரித்துவிடும் என்பதால்,அரசு கொடுக்கும் இழப்பீட்டு தொகை மூலம் எளிய மக்களால் அப்பகுதியில் நிலம் வாங்க முடியாது எனவும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
புதிதாக கட்டப்படும் விமான நிலையம் 10 கோடி பயணிகளை கையாளக்கூடியதாக இருக்கும். இரண்டு ஓடுபாதைகள், டெர்மினல் கட்டிடங்கள், டாக்சிவேகள், ஏப்ரன், சரக்கு கையாளும் முனையம், விமான பராமரிப்பு வசதிகள் மற்றும் பிற தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுடன் இது கட்டப்பட உள்ளது.