பிரதமர் தியானம் மேற்கொள்வதில் எந்த தவறும் இல்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 18 வது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவு கடந்த ஏப்ரல் மாதம் 19 தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏழுகட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தல் , ஆறு கட்ட வாக்கு பதிவு நிறைவு செய்துள்ளது.
இதனை தொடர்ந்து கடைசி கட்ட வாக்குப்பதிவு வரும் ஜூன் ஒன்றாம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பரப்புரை இன்று ( மே 30-ஆம்) தேதியுடன் ஓய்கிறது.
இதனை தொடர்ந்து வருகிற 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி உலகமே எதிர்பார்க்கும் அடுத்த இந்தியாவின் பிரதமர் யார் என்கிற முடிவு வெளியாகவுள்ளது.
இந்நிலையில், தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வந்த பிரதமர் மோடி, இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு இன்று மாலை கன்னியாகுமரிக்கு வருகை தர உள்ளார் .அங்கு உள்ள வினேகானந்தர் நினைவு மண்டபத்தில் தியானம் மேற்கொள்ளவுள்ளார்.
இதற்காக, டெல்லியில் இருந்து இன்று (30-ஆம் தேதி) விமானம் மூலம் திருவனந்தபுரம் வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு வருகை தரவுள்ளார்.
பின்னர், முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில், கடலின் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில், 31-ஆம் தேதி காலை தியானத்தை தொடங்கவுள்ளார்.
அதனை தொடர்ந்து வரும் 1ம் தேதி வரை கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் அவர் தங்கி இருக்கிறார்.1ம் தேதி தியானத்தை முடித்துவிட்டு விவேகானந்தர் நினைவு மண்ட பாறையில் இருந்து வெளியே வரும் அவர் படகு மூலம் கரை திரும்புகிறார்.
இதையும் படிங்க: இரவோடு இரவாக சென்னை முழுவதும் ஒட்டபட்ட போஸ்டர்! கலக்கத்தில் பாஜக
இந்த நிலையில் பிரதமர் தியானம் மேற்கொள்வதில் எந்த தவறும் இல்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.
நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமாவது உறுதி என்றும் 400 க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெற்றி பெறும் எனவும் பாமக பாஜக தமிழகத்தில் 20 இடங்களில் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழை கட்டாய பாடமாகவும் பயிற்று மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும் தமிழை வளர்ப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக தமிழ் வளர்ச்சிக்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டினார்.
மேலும் பிரதமர் மோடி கன்னியாகுமரி வருகை குறித்து திமுக , காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் , பிரதமர் தியானம் மேற்கொள்வது குறித்த கேள்விக்கு,”
பிரதமர் தியானம் மேற்கொள்ளதில் எந்த தவறும் இல்லை அவர் மறைமுகமாக தேர்தல் பரப்புரை மேற்கொள்ளவதாக எடுத்துகொள்ள முடியாது என்றும் அனைவருக்கும் தியானம் மேற்கொள்ளும் உரிமை 2019 ஆம் ஆண்டு கேதர்நாத்தில் தியானம் மேற்கொண்டார் என தெரிவித்தார்.