பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கும் கரும்புகளை குறிப்பாக 5 அடிக்கும் குறைவான கரும்புகளையும் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசிற்கு பாமக தலைவர் ராமதாஸ்(ramadoss) தெரிவித்துள்ளார்.மேலும் இதுவரை பொதுமக்களுக்கு வழங்க படும் கரும்புகளில் எந்தவித முறைகேடு நடைபெறவில்லை என்பது வரவேற்க்கதக்கது என்று தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு முதலில் சேர்க்கப்படவில்லை.இதனை தொடர்ந்து பரிசு தொகுப்பில் கரும்பை சேர்க்குமாறு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.இந்த நிலையில் முதலமைச்சர் அமைச்சர்களுடனான ஆலோசனைமேற்கொண்டார்.
இதனை அடுத்து தொகுப்பில் கரும்பு சேர்க்கப்படும் என்று தெரிவித்து இருந்தது.மேலும் கரும்பு 6 அடிக்கு அதிகமாக இருக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்து இருந்ததது.ஆனால் இதற்க்கு பாமக நிறுவனர் ராமதாஸ்(ramadoss) நெறிமுறையை மாற்றி அமைக்க கோரிக்கை விடுத்து இருந்தார்.
இது குறித்து (ramadoss) வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
“தமிழ்நாட்டில் பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கரும்புகளை கொள்முதல் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கரும்பு கொள்முதலில் இதுவரை எந்த முறைகேடு புகார்களும் எழவில்லை என்பது வரவேற்கத்தக்கது.
மேலும் தமிழக அரசு 6 அடிக்கு குறைவான கரும்புகளை தோட்டத்திலிருந்து நேரடியாக கரும்புகளை கொள்முதல் செய்ய வேண்டும். மேலும் கரும்பின் உயரம் சில காரணங்களால் குறைவது இயல்பு.
இதில் உழவர்களின் தவறு எதுவும் இல்லை. அதனால் உழவர்கள் பாதிக்கப்படக்கூடாது. அதனால், 5 அடிக்கும் கூடுதலான உயரம் கொண்ட கரும்புகளையும் கொள்முதல் செய்ய வேண்டும் என அரசு ஆணையிட வேண்டும்!” என தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.