சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் புகார் அளித்து வருகின்றன.
ஐபிஎல் தொடரில் மிகவும் பிரபலமான அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் நான்காண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் சென்னையில் விளையாடி வருகிறது.
ஆனால் சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட் கிடைப்பது என்பது பெரும் போராட்டமாகவே இருந்து வருகிறது.
இந்த நிலையில்,சென்னை லக்னோ இடையான போட்டியில், சென்னை வெற்றி பெற்றிருந்தாலும், சரி போட்டியில் சேப்பாக்கம் மைதானம் நிரம்பி வழியும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில்,
மைதானத்திலிருந்த நாற்காலிகள் அனைத்தும் காலியாக இருந்தது. ஆனால் அன்றைய நாளிலேயே அனைத்து டிக்கெட்களும் விற்றுத் தீர்ந்து விட்டதாக அறிவிப்பு வெளிவந்தது.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஒன்பதாம் தேதி ராஜஸ்தான் அணியுடன் நடைபெறும் தொடருக்கான நடைபெற்று வருகிறது. ஆனால் டிக்கெட் விற்பனை செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்து விட்டதாக அறிவிப்புகள் வந்தது.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் எப்படி சில நிமிடங்களில் இத்தனை ஆயிரம் டிக்கெட்டுகள் எப்படி விற்பனையாகும் என்று சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றன.
மேலும் சில இடைதரகர்கள் டிக்கெட்டை அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாகவும், குறிப்பாக 1500 ரூபாய் டிக்கெட் 3000 முதல் 5500 வரை விற்பனை செய்யப்படுவதாகவும்,2000 ரூபாய் டிக்கெட் பத்தாயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றம் சாட்டி வருகின்றனர்.