வன்கொடுமை பகுதியாக புதுக்கோட்டை மாவட்டத்தை அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்மேலும் இதனை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேற்று சமூகத்தைச் சேர்ந்த மக்களை அனுமதிக்க கூடாது என கோயில் பூசாரி ராஜனின் மனைவி சாமி ஆடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,மேலும் அந்த வீடியோவில் சிங்கம்மாள் சாமி ஆடியபடி, குறிப்பிட்ட மக்களை,`நீங்க எல்லாம் உள்ள வரக் கூடாது’ என்று அவர்களது சமூகத்தினரைக் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார்.மேலும் அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது.
குடிநீர்த் தேக்கத் தொட்டியில் மலம் கலப்பு:
புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள இறையூர்,வேங்கவயல் பகுதியில் ஆதிதிராவிடர் குடியிருப்பில் பகுதியில் உள்ள குடிநீர்த் தேக்கத் தொட்டியில், மர்ம நபர்கள் சிலர் மலம் கலந்து உள்ளனர்.மேலும் அந்த தண்ணீரை அருந்திய மக்கள் உடநலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் இந்த விவகாரம் தமிழகம் முழுவதிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோர் வேங்கவயல் பகுதிக்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர் . அப்போது தான் மாவட்ட ஆட்சியர் அதிர்ச்சி அடைந்தார். அந்த கிராமத்தில் அய்யனார் கோயிலில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களை பல தலைமுறைகளாக உள்ளே கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை.
கிராமத்தில் இரட்டைக்குவளை முறை:
அந்த கிராமத்தில் காலம் காலமாக இரட்டைக்குவளை முறை மாற்றுச் சாதியினரால்,வெறுப்பு,சாதியத் தீண்டாமை தொடர்ந்து இருந்து வருகிறது“ அங்குள்ள ஊர் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட மக்களை மாவட்ட ஆட்சியர் கோயிலுக்குக் அழைத்து சென்று சாமி கும்பிட வைக்க உத்தரவிட்டார்.
இந்த நிலையில் தான் மாவட்ட ஆட்சியரின் கண்முன்பே வேறு சமூகத்தை சேர்ந்த கோயில் பூசாரி ராஜன் மனைவி சிங்கம்மாள் சாமி ஆடியபடி, `நீங்க எல்லாம் கோவில் உள்ள வரக் கூடாது’ என்று பட்டியல் சமூகத்தினரைக் குறிப்பிட்டுப் பேசியதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆட்சியர், சிங்கம்மாள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இது குறித்து அவர் வெளியிட்ட புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அறிக்கையில்,`
புதுக்கோட்டை மாவட்டத்தில் சாதி, மத, இன வேறுபாடு இன்றி அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் கோயில்களில் சாதியரீதியாக அனுமதி மறுக்கப்பட்டாலோ, தேநீர்க் கடைகளில் இரட்டைக்குவளை முறை பின்பற்றப்பட்டாலோ, முடித்திருத்தங்களில் சாதிய வேறுபாடு காணப்பட்டாலோ, சட்டரீதியான கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் வன்கொடுமை பகுதியாக புதுக்கோட்டை மாவட்டத்தை அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்
பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன்,
புதுக்கோட்டை மாவட்டம் கோயிலுக்குள் பட்டியலின மக்களை நுழைய செய்த மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி. இரண்டு பெண் அதிகாரிகளும் செயல்படுத்தி காட்டியிருப்பதாக குறிப்பிட்டார்.
மேலும் இதே போன்று அரசும் அதிகாரிகளும் நினைத்தால் 24 மணி நேரத்தில் ஜாதிய கொடுமைகளை ஒழிக்க முடியும், ஆனால் அரசும் அதிகாரிகளும் மெத்தனமாக இருக்கிறார்கள். தயக்கம் காட்டுகின்றனர். வன்கொடுமை தடுப்புச் சட்டம் என்பது ஒன்றிய அரசு இயற்றிய சட்டம், இதை முறையாக செயல்படுத்தினாலே ஜாதிய வன்கொடுமை இருக்காது” என கூறினார்.