சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ்நாடு என கூறுவதை விட தமிழகம் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும் என்று ஆளுநர் தெரிவித்த கருத்து தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையில் ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ஆளுநர் மாளிகையில் இருந்து பொங்கல் பண்டிகைக்கு விழாவுக்காக வாழ்த்து அழைப்பிதழ் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அந்த அழைப்பிதழில் தமிழ்நாடு என்பதற்கு மாறாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி என அச்சிடப்பட்டு இருந்தது.அதில் தமிழ்நாடு அரசின் முத்திரைக்கு பதிலாக இந்திய அரசின் முத்திரை இடம்பெற்று இருந்தது.
இந்த சம்பவம் தமிழ்நாட்டின் அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கட்சிகளும் இதற்க்கு கடுமையான எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்து இருந்தனர்.
இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் வரும் 26ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் ஆளுநர் மாளிகையின் வரவேற்பு அழைப்பிதழ்தற்பொழு மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
அதில் தமிழக அரசின் முத்திரைக்கு பதிலாக இந்திய அரசின் முத்திரை மற்றும் திருவள்ளுவர் ஆண்டு ,தை திங்கள் ,தமிழ்நாடு ஆளுநர் போன்ற வாக்கியங்கள் இடம் பெற்று உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.