தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 10ஆம் தேதி வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 1ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரையும், பிளஸ் 1 பொதுத் தேர்வு மார்ச் 4ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரையும் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற்றன.
இதனை தொடர்ந்து கடந்த மே 6 ஆம் தேதி பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டார்.
அதன்படி, மொத்தம் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 2023 ஆம் ஆண்டு 94.03 சதவீதம் தேர்ச்சி பதிவாகியிருந்த நிலையில் இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் சிறிது அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: ”வெளியானது 12th Result..” தேர்ச்சி விகிதத்தில் அசத்திய 3 மாவட்டங்கள்!!
இந்த நிலையில், தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 10ஆம் தேதி வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே மே 10ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என கூறப்பட்ட நிலையில், திட்டமிட்டபடியே தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளது.
தமிழ்நாட்டில் 2023-24 கல்வியாண்டுக்கான 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்று முடிந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசு தேர்வுகள் இயக்கத்தில் மே 10ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து https://www.tnresults.nic.in/ https://www.dge.tn.gov.in/ https://results.digilocker.gov.in/ ஆகிய இணையதளங்களிலும் தங்களது தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.