சென்னை கொரட்டூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களை வைத்து நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்ய வைத்ததாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை(annamalai) குற்றம்சாட்டியுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்ளில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்..
சென்னை கொரட்டூர் அரசு உயர் நிலைப் பள்ளியில், 4-ம் வகுப்பு மாணவர்களை வைத்து மொட்டை மாடியில் உள்ள நீர்த் தேக்கத் தொட்டியை சுத்தம் செய்ய வைத்துள்ள காணொலி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. அரசுப்பள்ளி மாணவர்களை கழிப்பறைகள் சுத்தம் செய்ய வைப்பது, ஆபத்தான உயரத்தில் இருக்கும் நீர்த்தேக்கத் தொட்டியை சுத்தம் செய்ய வைப்பது என, தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள், அரசுப்பள்ளி மாணவ மாணவியரைமாற்றாந்தாய் மனப்பான்மை யுடன் தமிழக அரசு நடத்தி வருவதை வெளிப்படுத்துகிறது. இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.