பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழக பயணம் குறித்து நடிகரும் அரசியல் தலைவருமான சரத்குமார் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
கன்னியாகுமரியில் பிரதமர் மோடி இன்று முதல் 3 நாட்கள், 45 மணி நேரத்துக்கு தொடர்ந்து தியானம் மேற்கொள்கிறார்.இதற்காக, கன்னியாகுமரி வந்த பிரதமர் மோடி, வெள்ளை வேட்டி அணிந்து பகவதியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர், விவேகானந்தர் பாறைக்கு சிறப்பு படகு மூலம் சென்றடைந்தார். பிரதமரின் வருகையையொட்டி அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி, டெல்லியில் இருந்து விமானம் மூலம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு வியாழக்கிழமை மாலை வந்தார்.அங்கிருந்து, கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில், அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேட் தளத்துக்கு ஹெலிகாப்டரில் வந்தடைந்தார்.
பின்னர், பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். அப்போது பிரதமருக்கு தீப ஆராதனை காட்டப்பட்டது. பிரதமருக்கு பகவதியம்மனின் திருவுருப்படம் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில், கடலின் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில், 31-ஆம் தேதி காலை தியானத்தை தொடங்கவுள்ளார்.
இதையும் படிங்க: பிரதமரின் தனிப்பட்ட தியான நிகழ்வை அரசியல் கட்சி நிகழ்வாக மாற்றக்கூடாது- பாஜக உத்தரவு
1ம் தேதி தியானத்தை முடித்துவிட்டு விவேகானந்தர் நினைவு மண்ட பாறையில் இருந்து வெளியே வரும் அவர் படகு மூலம் கரை திரும்புகிறார்.
இந்த சூழலில் பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழக பயணம் குறித்து நடிகரும் அரசியல் தலைவருமான சரத்குமார் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த பதிவில், ஆன்மீக பூமியான தமிழ்நாட்டிற்கு மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திரமோடி ஜி அவர்கள் வருகை தரும் போதெல்லாம், பொதுமக்களும், பாஜக நிர்வாகிகளும் மோடிஜி அவர்களை வரவேற்று மகிழ்ச்சியுறுவார்கள்.
ஜூன் 4ந்தேதி அன்று மீண்டும் மோடிஜி தலைமையிலான ஆட்சி அமையப் போவது உறுதி. 3 வது முறையாக பாரத பிரதமராக பதவியேற்க உள்ள தருணத்தில், பதவியேற்பதற்கு முன்பு தமிழ்நாட்டிற்கு மோடி ஜி அவர்களின் வருகை தமிழக மக்கள் மீதும்,
தமிழ் கலாச்சாரத்தின் மீதும் அவர் கொண்டுள்ள அளப்பரிய பாசத்தை காட்டுகிறது என்பதை நாம் உணரலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.