தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பதாக MLA அப்பாவுக்கு அறப்போர் இயக்கம் கேள்விஎழுப்பியுள்ளது.
திருநெல்வேலி காவல்கிணறு மலர் மார்கெட் வணிக வளாகம் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக மூடி இருப்பதால் சுற்றியுள்ள விவசாயிகள் நேரடி சந்தை இல்லாமல், அதிக போக்குவரத்து செலவு ஏற்பட்டு, குறைந்த லாபத்திற்கு விற்கும் சூழ்நிலை நிலவி வருகிறது.
ராதாபுரம் MLA அப்பாவு அவர்கள் தனது 2021தேர்தல் வாக்குறு தியில் தான் MLA வாக தேர்ந்தெடுக்கப்பட்டால் காவல்கிணறு மலர் மார்கெட் மீண்டும் திறப்பதாக வாக்குறிதி கொடுத்தார்.
ஆனால் அதை திறக்க இன்று வரை எந்த முயற்சியும் எடுப்பட்டதாக தெரியவில்லை. இதை திறந்தால் சுற்றியுள்ள வடக்கன்குளம், பழவூர் உட்பட பல கிராம விவசாயிகள் பயனடைவர்.
இந்த பகுதி விவசாயிகளின் முக்கிய கோரிக்கையாக இது இருந்து வருகிறது. எனவே இதை உடனே திறந்து விவசாயிகள் நேரடி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று விவசாயத் துறை அமைச்சர் MRK பன்னீர்செல்வம், MLA திரு அப்பாவு, திருநெல்வேலி ஆட்சியர் உள்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறப்போர் இயக்கம் இன்று புகார் மனு அனுப்பி உள்ளது.என்று தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்து உள்ளது.