முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு உண்மையிலேயே தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள் மீது அக்கறை இருந்தால் துரைமுருகன் அவர்களை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியிருக்க வேண்டும் என அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இது குறித்து அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளதாவது : அமைச்சர் துரைமுருகன் என்ன பேசினாலும் அவரை இது போல Thuglife படம் போட்டு திமுக ஆதரவாளர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஆனால் கடந்த மூன்று வருடத்தில் அவருடைய துறையில் தான் அதிகபட்ச ஊழல்கள் நடந்து வருகிறது. அமைச்சர் துரைமுருகன் இந்த ஊழல்கள் குறித்து ஒரு வார்த்தை கூட பேச மாட்டார். எந்த ஒரு விசாரணையும் நடத்த உத்தரவிட மாட்டார்.
ஏன் இந்த அமைதி? இயற்கை வளங்களை கொள்ளை அடிக்கும் திருடர்களிடம் Thuglife செய்து மாஸ் காட்ட மாட்டாரா? அவர்கள் திருட்டை தடுக்க மாட்டாரா? இப்படி ஒரு கையாலாகாத அமைச்சர் தமிழ்நாட்டுக்கு தேவையா? இயற்கை வளங்களை காப்பாற்ற அதிகாரம் இருந்தும் அமைச்சர் துரைமுருகன் அமைதியாக இருக்க என்ன காரணம்?அவருக்கும் கொள்ளையர்களுக்கும் என்ன தொடர்பு?
முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு உண்மையிலேயே தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள் மீது அக்கறை இருந்தால் துரைமுருகன் அவர்களை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி மணல் கொள்ளை மற்றும் கல் குவாரி ஊழல் குறித்து விசாரணை நடத்தி உண்மையை வெளியிடட்டும் என்று அறப்போர் இயக்கம் தனது பதிவில் தெரிவித்துள்ளது