முதலமைச்சர் ஸ்டாலின் உலக முதலீட்டாளர்களை சந்திக்க விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளதாக சட்டப்பேரவையில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று தொழில் துறை மீதான மானிய கோரிக்கையில் அமைச்சர் TRB .ராஜா உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர்,” மாநிலத்தில் நிலவும் சாதகமான தொழில் சூழல், பொருளாதார வளம், மக்கள் மேம்பாட்டினால் பிற இந்திய மாநிலங்களுக்கும், பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் நாடுகளுக்கும் முன்னுதாரணமாகத் தமிழ்நாடு திகழ்கிறது.
இதையும் படிங்க: நீட் விலக்கு – தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனித்தீர்மானம்! அடுத்து என்ன ?
மேலும் சென்னையில் நடந்த உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஈர்க்கப்பட்ட முதலீடுகளில், 60% முதலீடுகள் பணிகளாக மாறியுள்ளன. இது தொடர்பாக 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், 379 ஒப்பந்தங்களுக்கான பணிகள் நடந்து வருவதாக தெரிவித்தார்.
கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த 2 முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் பல லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக அவர்கள் கூறினாலும், அவற்றில் சொற்பமானவை மட்டுமே பணிகளாக மாறியதாக தெரிவித்த அவர்,”
மேலும் மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இந்தாண்டு ₹2100 கோடி கடன் வழங்கப்படும்.
குறிப்பாக திருவண்ணாமலை, கரூர் மாவட்டத்தில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும் என்றும்,தனியார் பங்களிப்புடன் கூட்டு முயற்சியில் தொழிற்பூங்காக்களை சிப்காட் உருவாக்கும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ஜனவரி 28ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்கிறார்; ஸ்பெயின், ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பயணம் மேற்கொள்கிறார்.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 28-ம் தேதி முதல் வெளிநாடுகளில் பயணம் மேற்கொள்கிறார் என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல் தெரிவித்துள்ளார்.