நகை இருந்த பையை போட்டு Seat பிடிக்க முயன்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
பொதுவாக பேருந்துந்துகளில் பயணம் செய்ய தயாரக இருக்கும் நம்மில் பலரும் ஜன்னல் வழியாகஇருக்கையை பிடிக்க துண்டுபுத்தகம், பை உள்ளிட்டவற்றை போட்டு இருக்கையில் அமருவர்.இப்படி தான் நகை இருந்த பையை போட்டு Seat பிடிக்க முயன்ற நபருக்கு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். 30 தங்க நகை கடை மற்றும் துணிக்கடை நடத்தி வருகிறார்.இதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவர், விக்னேஷிடம் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 5ம் தேதி ஏழுமலையிடம் தங்க நகைகளை கொடுத்து, ‘லேசர் கட்டிங்’ செய்ய சென்னைக்கு அனுப்பினார்.
இந்த நிலையில், சென்னை வந்த ஏழுமலை,திருவண்ணாமலை செல்ல கோயம்பேடு பேருந்து நிலையம் சென்றார். அங்கு, செய்யாறு செல்லும் தனியார் பேருந்தில் இடம் பிடிக்க, 30 சவரன் தங்க நகை இருந்த பையை, ஜன்னல் வழியாக இருக்கையில் போட்டுள்ளார்.
இதனையடுத்து பேருந்திற்குள் ஏறிச் சென்று பார்த்தபோது பை திருடுபோய் இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் போகர் அளித்தார். மேலும் புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் போலீசாரின் பையை திருடியது நீலாங்கரையை சேர்ந்த சந்திரசேகர் என்பது விசாரணையில் தெரியவந்தது.இதனை அடுத்து அவரிடம் இருந்து திருடப்பட்ட பையை மீட்டு ஏழுமலையிடம் ஒப்படைக்கப்பட்டது.