தென் மாவட்டங்களுக்கு இன்று 60 பேருந்துகள் இயக்க முடிவு செய்த நிலையில் மழை மற்றும் வெள்ளம் காரணமாக பயணிகளின் வருகைக்கு ஏற்ப குறைவான பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (tn transport) தெரிவித்துள்ளது.
இது குறித்து போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில்..
18/12/2023 இன்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் தமிழக தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் பயணிகளின் வருகைக்கேற்ப மட்டும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இன்றைய தினம் 60 பேருந்துகள் தென்மாவட்டங்களுக்கு இயக்க முடிவு செய்த நிலையில், மழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக. பயணிகளின் வருகைக்கேற்றவாறு குறைவான பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் மூலமாக தென்நிலைமையைமாவட்டங்களிலிருந்து பிற ஊர்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள்கண்காணித்து, பயணிகளின் தேவைக்கு ஏற்ப மட்டும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதனை இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.