சென்னையைத் தொடர்ந்து மதுரை மற்றும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் அமைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையைத் தொடர்ந்து மதுரை மற்றும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் அமைய உள்ள நிலையில், அதற்கான நிதியை கடனாக வழங்கும் பன்னாட்டு ஆசிய முதலீட்டு வங்கியின் பிரதிநிதிகள் மதுரை மற்றும் கோவையில் நாளை நேரில் கள ஆய்வு செய்ய உள்ளனர்.
வங்கி பிரதிநிதிகளின் நேரடி ஆய்வுக்குப் பிறகு, வரும் வெள்ளிக்கிழமை தமிழ்நாடு நிதித்துறை செயலாளரை சந்தித்தும் ஆலோசனை மேற்கொள்கின்றனர்.
தொடர்ந்து மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டத்தின் சாத்தியக்கூறு ஆய்வறிக்கை (DFR) மற்றும் விரிவான திட்ட அறிக்கையை (DPR) மெட்ரோ ரயில் நிறுவனம் அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
இந்த நிலையில், விரைவில் தமிழ்நாடு அரசு மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டுமான பணிகளுக்கு ஒப்புதல் அளித்து ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கும்.
அதன் பிறகு ஒன்றிய அரசும் இத்திட்டத்தை தொடங்க ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், மதுரை மற்றும் கோவை மெட்ரோ திட்ட கட்டுமான பணிகளுக்கான ஒப்புதல் வழங்கப்பட்டு சென்னை மெட்ரோ நிறுவனம் மூலம் முறையாக டெண்டர் அறிவிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.