இந்துக்களின் உணர்வுகள் புண்படும் வகையில் ராகுல் காந்தி பேசிய போது தமிழகம், புதுவையைச் சேர்ந்த 40 எம்பிக்கள் ஒரு எதிர்ப்புக் குரல் கூட கொடுக்காமல் அமர்ந்திருந்தது தான் வேதனை அளிப்பதாக தெலங்கானா மாநில முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்
தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் ,” நாடாளுமன்றத்தில் நேற்று இந்துக்கள் என்றாலே வன்முறையாளர்கள் என்று சொல்லி ஒட்டுமொத்த இந்துக்களையும் மோசமாக ராகுல் காந்தி விமர்சித்திருக்கிறார் .
அவருக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நாடாளுமன்றத்துக்கென ஒரு விதிமுறை இருக்கிறது, நடைமுறை இருக்கிறது. அது மீறி ராகுல் காந்தி படத்தைக் காட்டி படம் காண்பித்து கொண்டிருந்தார்.
இதையும் படிங்க:அமைச்சர் மான்சுக் மண்டாவியாவுக்கு விசிக எம் பி ரவிக்குமார் திடீர் கடிதம்!
மூன்று அமைச்சர்கள் எழுந்து ராகுல் காந்திக்கு பதில் கூறியதை எதிர்மறையாக கூறுகிறார்கள். ராகுல் எல்லாவற்றையும் தவறாக சொல்லும் போது அமைச்சர்கள் எழுந்து குறுக்கிட்டு பதில் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
நாட்டுக்காக உயிரிழந்த அக்னி வீரர்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை என்ற தவறான தகவலை ராகுல் காந்தி கூறினார்.
அதற்கு மத்திய பாதுகாப்பு துறை ராஜ்நாத் சிங் பதில் அளித்தார். அவர்களது குடும்பத்துக்கு ஒரு கோடி வழங்கப்பட்டுள்ளது என்பதையும், அவர்களது உயிர்களுக்கு ஈடு இணை ஏதும் இல்லை என்பதையும் அமைச்சர் ராஜ்நாத் சிங் தெளிவாக கூறினார் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் ,” இந்துக்களின் உணர்வுகள் புண்படும் வகையில் ராகுல் காந்தி பேசிய போது தமிழகம், புதுவையைச் சேர்ந்த 40 எம்பிக்கள் ஒரு எதிர்ப்புக் குரல் கூட கொடுக்காமல் அமர்ந்திருந்தது தான் வேதனை அளிப்பதாக தெலங்கானா மாநில முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.