தமிழகத்தில் மீண்டும் மினி பஸ்களை இயக்க அனுமதி வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒருங்கிணைந்த மினி பஸ் திட்ட வரைவு அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
- சென்னையில் தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையார் பகுதிகளுக்கு சேவை வழங்கப்படாது என்றும்,
- அதே நேரத்தில் திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் பகுதிகளுக்கு மினி பஸ் சேவை வழங்கப்படும்.
- மேலும் எந்தெந்த வழித்தடத்தில் மினி பஸ் சேவைகளுக்கு அனுமதி வழங்குவது என RTO-க்கள் முடிவு செய்யலாம்.
- ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இல்லாமல் ஒரு மினி பேருந்தில் அதிகபட்சமாக 25 பேர் பயணம் செய்யும் வகையில் இருக்கை வசதி அமைந்திருக்கும்.
இதையும் படிங்க: ”எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை..”எங்கள் இலக்கு.. அதிரடி காட்டிய புஸ்ஸி ஆனந்த்!
- அனைத்து மினி பஸ்களிலும் ஜிபிஎஸ் வசதி பொருத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வரைவு அறிக்கை தொடர்பாக பொதுமக்கள் தங்களது கருத்துக்களை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இதன்படி வரும் ஜூலை 14ஆம் தேதிக்குள் பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.
- மேலும் இது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் ஜூலை 22ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் உள்துறை முதன்மை செயலாளர் தலைமையில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.