தேனி மாவட்டம் பெரியகுளத்தில், அம்பேத்கர் பிறந்த நாள் ஊா்வலத்தின்போது ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு பகுதியச் சேர்ந்தவர்களிடையே கலவரம் நடந்தது.இதில் காவலர்கள் தாக்கப்பட்டதுடன், காவல் நிலையம், ஆம்புலன்ஸ்,வாகனங்கள், பஸ் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது டிவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதில், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. மாலையில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு பகுதியை சேர்ந்தவர்கள் ஊர்வலம் வந்தனர்.
பெரியகுளத்தில் இரு தரப்பினர் இடையேயான மோதலால் ஒரு பெண் ஆய்வாளர் உட்பட 8 காவலர்கள் தாக்கப்பட்டு,காவல் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸ்,வாகனங்கள் உட்பட காவல்நிலையமே முழுமையாக தாக்குதலுக்கு உட்பட்டு இருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.
இதனால் தேனி மாவட்டம் முழுவதிலும் பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது.இந்த விடியா ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலைமாறி,இன்று காவல்துறைக்கே பாதுகாப்பில்லாத நிலை உருவாகி இருக்கிறது.எந்தவித அச்சமுமின்றி காவல்நிலையத்தின் மீதே நடத்தப்படும் தொடர் தாக்குதல்கள் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதற்கான மிகப்பெரிய சாட்சியம்.
இனி இது போன்ற தாக்குதல்கள் நடைபெறாமல் தடுத்து ,தமிழகத்தில் பொது அமைதியை காக்க மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்த விடியா அரசை மீண்டும் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன் என தெரிவிதுள்ளார்.