திருச்செந்தூர் கோயில் யானை தெய்வானை, கோடை வெயிலுக்கு இதமாக ஷவரில் ஆனந்தக் குளியல் போட்ட காட்சிகள் வெளியாகி உள்ளது.

கோடை வெயிலின் தாக்கத்தால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் வெயிலின் அளவு 100 டிகிரியை தாண்டியுள்ளது. வெயிலின் தாக்கத்தால் மனிதர்கள் மட்டுமின்றி கால்நடைகளும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன. ஆறு, குளங்களில் கால்நடைகள் குளித்து வெக்கையை தவிர்த்து வருகின்றன.

இதையும் படிங்க:திருப்பூரில் முதலையாரின் மிட்நைட் வாக்கிங்! viral video
இதே போல கோயில்களில் இருக்கும் யானைகளும் வெயிலின் வெம்மையால் துயர் அடைந்துள்ளன. இதனால் யானைகளை குளிப்பாட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மயிலாடுதுறையில் சிறுத்தை இருக்கும் இடம் கண்டுபிடிப்பு..!!!
திருச்செந்தூர் கோயிலில் உள்ள யானை தெய்வானையையும், வெயிலில் இருந்து தப்பிக்க பிரத்யேகமாக கட்டப்பட்ட ஷவரில் குளியல் போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தெய்வானை குளியல் போடும் காட்சி இப்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் யானை தெய்வானைக்காக கடந்த ஆண்டு நீச்சல் குளம் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.