“கலியுக கர்ணன் KPY பாலா” என்ற வாசகத்துடன் அனைவரின் இதயத்தில் இருக்கும் பாலாவை “ஹார்ட் பிஸ்கட்டாலேயே” வரைந்து ஓவிய ஆசிரியர் அசத்தி உள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த சு.செல்வம் அவர்கள் சின்னத்திரை நடிகர் KPY பாலா அவர்களின் மக்களுக்கு செய்யும் உதவி, சேவையை போற்றும் விதமாகவும், வாழ்த்து விதமாகவும்,
சேவைகள் மூலம் அனைவரின் ஹார்ட்டிலும் இடம் பெற்றிருக்கும்KPY பாலா அவரின் உருவத்தை ‘ஹார்டில் இடம் பிடித்திருக்கும் பாலா’ என்பதை குறிக்கும் வகையில் “ஹார்ட் பிஸ்கட்டாலேயே” பகுதி நேர ஓவிய ஆசிரியர் செல்வம் வரைந்தார்.
சின்னத்திரையில் தனது காமெடியால் மக்களை வெகுவாக கவர்ந்த நடிகர் பாலா தனியார் தொலைக்காட்சியில் ‘கலக்கப்போவது யாரு’ எனும் நிகழ்ச்சிகளில் மூலம் பிரபலமடைந்த KPY பாலா மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்திருக்கிறார்.
மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று அங்கு வசிக்கும் மக்களுக்கு தனது வங்கி சேமிப்பில் இருந்து தலா ஆயிரம் ரூபாய் இருநூறு வீடுகளுக்கு வழங்கினார். ஏறக்குறைய 200 குடும்பங்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் என இரண்டு லட்சம் கொடுத்திருக்கிறார் சின்னத்திரை நடிகர் KPY பாலா அவர்கள்.
இரண்டு லட்சம் ரூபாயோடு பாலா நிறுத்தவில்லை, மேலும் சில தினங்களுக்கு பிறகு வேறொரு பகுதியிலும் சில குடும்பங்களுக்கு தலா ஆயிரம் ரூபாயும், நிவாரணப் பொருட்களும் வழங்கினார் KPY பாலா, இது மட்டுமல்ல ஏற்கனவே சில மாதங்களுக்கு முன் ஆம்புலன்ஸ் வசதி இல்லாத மலை கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்திருந்தார்.
எனவே பாலா மக்களின் பாராட்டுகளுக்கு உகந்தவரே அவரின் மக்களுக்கு உதவி செய்தல், சேவை மனப்பான்மையை போற்றுவிதமாகவும், வாழ்த்து விதமாகவும் சேவைகள் செய்வதின் மூலம் அனைவரின் ஹார்ட்டிலும் (இதயத்தில்) இடம் பிடித்த பாலா,
“கலியுக கர்ணன் KPY பாலா” என்ற வாசகத்தை எழுதி ‘ஹார்டில் பாலா’ என்பதை குறிக்கும் வகையில் வித்தியாசமான முறையில் வண்ணத்தில் ஹார்ட் பிஸ்கட்டை தொட்டு KPY பாலா உருவத்தை
“ஹார்ட் பிஸ்கட்டாலேயே” ஐந்து நிமிடங்களில் ஓவிய ஆசிரியர் செல்வம் அவர்கள் வரைந்தார்.
இந்த ஓவியத்தை கண்ட பொதுமக்கள் பலரும் அனைவரின் ஹார்ட்டிலும் இடம் பிடித்த பாலாவை ஹார்ட் பிஸ்கட்டாலேயே வரைந்தது அருமை என்று ஓவிய ஆசிரியர் செல்வம் அவர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவித்தார்கள்.