ராமநாதபுரம் மக்களவை தொகுதி தேர்தலில் எந்த கட்சி முன்னிலையில் உள்ளது என்பது குறித்து ஐ தமிழ் நியூஸ் எடுத்த சர்வே முடிவு இதோ…
ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் ராமநாதபுரம், பரமக்குடி தனி, முதுகுளத்தூர், திருவாடானை, அறந்தாங்கி, திருச்சுழி என்று 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் அறந்தாங்கி தொகுதி புதுக்கோட்டை மாவட்டத்த்லும், திருச்சுழி தொகுதி விருதுநகர் மாவட்டத்திலும் உள்ளது.
2021ல் நடந்த சட்டமன்ற தேர்தலின் முடிவுகளின்படி, அறந்தாங்கி தொகுதியில் காங்கிரஸின் தி. இராமச்சந்திரன், திருமயத்தில் திமுகவின் தங்கம் தென்னரசு, பரமக்குடி தனி தொகுதியில திமுக வேட்பாளர் முருகேசன், திருவாடானை தொகுதியில் காங்கிரஸின்ஆர். எம். கருமாணிக்கம், ராமநாதபுரத்தில் திமுக மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், முதுகுளத்தூரில் திமுகவின் ராஜகண்ணப்பன் ஆகியோர் வெற்றிபெற்று எம்.எல்.ஏவாக உள்ளனர்.
அதாவது, ராமநாதபுரம் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளும், திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகளின் வசமே உள்ளது.
ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளராக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் நவாஸ்கனி, ஏணி சின்னத்தில் மீண்டும் போட்டியிடுகிறார்.அதிமுக தரப்பில் விருதுநகர் கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் ஜெயபெருமாள் இரட்டை இலையிலும், பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாக பலாப்பழம் சின்னத்திலும், நாம் தமிழர் கட்சியின் சந்திரபிரபா, மைக் சின்னத்திலும் களத்தில் உள்ளனர்.
தொகுதி எம்.பியின் செயல்பாடு எப்படி? அவர் வாக்குறுதிகளை நிறைவேற்றினாரா? தொகுதியின் முக்கியப் பிரச்சனைகள் என்ன? தொகுதியில் எந்த கட்சிக்கு முன்னிலை உள்ளது என்பது குறித்து ஐ தமிழ் நியூஸ் குழு எடுத்த சர்வே முடிவுகள் இதோ…
அறந்தாங்கி தொகுதியில் திமுகவுக்கு 41 சதவீதமும், அதிமுகவுக்கு 22 சதவீதமும், நாம் தமிழர் கட்சிக்கு 14 சதவீதமும், மற்ற கட்சிகளுக்கு 13 சதவீத ஆதரவையும் வாக்காளர்கள் வழங்கி உள்ளனர்.
எம்.பியின் செயல்பாடு சிறப்பாக இருப்பதாக 13 சதவீதத்தினரும், சுமார்தான் என்று 37 சதவீத வாக்காளர்களும் 50 சதவீதம் பேர் மோசம் என்றும் தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் தொகுதியில் 45 சதவீத வாக்காளர்கள் திமுகவுக்கும், 35 சதவீதத்தினர் அதிமுகவுக்கும், 15 சதவீதம் பேர் பாஜகவுக்கும் 5 சதவீதத்தினர் நாம் தமிழர் கட்சிக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
எம்.பி.யின் செயல்பாடு சிறப்பு என்று 23 சதவீதத்தினரும், 73 சதவீதம் பேர் சுமார் என்றும், மோசம் என்று 4சதவீத வாக்காளர்களும் கூறியுள்ளனர்.
பரமக்குடி தொகுதியில் திமுகவுகு 51 சதவீத வாக்காளர்களும், பா.ஜ.கவுக்கு 31 சதவீதத்தினரும், அதிமுகவுக்கு 13 சதவீதம் பேரும், 3சதவீதம் பேரும் நாம் தமிழருக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தொகுதியில்,எம்.பியின் செயல்பாடு சிறப்பாக உள்ளதாக 26 சதவீத வாக்காளர்களும், சுமார் என 26 சதவீதத்தினரும், 48 சதவீத வாக்காளர்கள் மோசம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
முதுகுளத்தூரில் திமுகவுக்கு 35 சதவீதம், பா.ஜ.கவுக்கு 25 சதவீதம், அதிமுகவுக்கு 12 சதவீதம், நாம் தமிழர் கட்சிக்கு 11 சதவீதம் வாக்காளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 17 சதவீதம் வாக்காளர்கள் மற்ற கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த தொகுதியில் எம்.பியின் செயல்பாடு சிறப்பு என்று 12 சதவீதம் பேரும், சுமாராக இருப்பதாக 57 சதவீதத்தினரும், 31 சதவீதம் பேர் செயல்பாடு மோசம் என்றும் கூறியுள்ளனர்.
திருவாடானை தொகுதியில், 41 சதவீத வாக்காளர்களின் ஆதரவு திமுகவுக்கு உள்ளது. அதிமுகவுக்கு 36, பா.ஜ.கவுக்கு 13, நாம் தமிழருக்கு 10 சதவீத வாக்காளர்களின் ஆதரவு உள்ளது.
எம்.பி நவாஸ்கனியின் செயல்பாடு சிறப்பு என்று 26 சதவீதம் வாக்காளர்களும், 55 சதவீதத்தினர் சுமார் என்றும், 19 சதவீதம் பேர் மட்டும் மோசம் என்றும் தெரிவித்துள்ளனர்.
திருச்சுழி தொகுதியில் திமுகவுக்கு 44 சதவீத வாக்காளர்களின் ஆதரவு உள்ளது. அதிமுகவுக்கு 21, பா.ஜ.கவுக்கு 18, நாம்தமிழருக்கு 15 சதவீதத்தினரின் ஆதரவு உள்ளது. தொகுதி எம்.பியின் செயல்பாடு சிறப்பு என்று யாரும் தெரிவிக்கவில்லை. 74 சதவீத வாக்காளர்கள் சுமார் என்றும், 26 சதவீதம் பேர் மோசம் என்றும் தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் தொகுதியைப் பொறுத்தவரை ஒட்டுமொத்தமாக குடிதண்ணீர் பிரச்சனை முதலிடத்திலுள்ளது. அதே போன்று தொழில் வளர்ச்சிக்கு எவ்வித நடவடிக்கையும் அரசியல் கட்சிகள் எடுக்கவில்லை என்னும் குற்றச்சாட்டும் வாக்காளர்களிடம் உள்ளது.
ஒட்டுமொத்தமாக ராமநாதபுரம் தொகுதியைப் பொறுத்தவரை அதிமுக 19 சதவீத வாக்குகளுடன் மூன்றாவது இடத்திலும், பாரதிய ஜனதா கட்சி 23 சதவீத ஆதரவுடன் இரண்டாவது இடத்திலும், 43 சதவீத வாக்காளர்களின் ஆதரவுடன் திமுக முதலிடத்திலும் உள்ளது.