ஆபரேஷன் காவேரி’(operation cauvery) திட்டம் மூலமாக சூடானில் இருந்து 3800க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்புப் பணிகள் நிறைவு பெற்றதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த 2021 ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைபெறுகிறது. அந்நாட்டில் ராணுவம் மற்றும் துணை ராணுவத்தினரிடையே மோதல் நீடித்து வருகிறது.இந்த போரில் இதுவரை 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 2,000க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
சூடானில் வசிக்கும் 4,000 இந்தியர்கள் வசித்து வருகின்றனர்.இந்நிலையில்,மோதல் நடந்து வரும் இந்தியர்களை பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்களை மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஆபரேஷன் காவேரி’ எனும் திட்டம் உருவாக்கப்பட்டு விமானம் மூலம் மீட்கப்பட்டனர்.
இந்த திட்டத்தின் கீழ், 3,862 பேர் மொத்தமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும், எல்லையோர நாடுகள் வழியாகவும் 86 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.