கோவில்பட்டி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கரவாகனத்தின் மீது பெட்ரோல் லாரி மோதிய விபத்தில் பதநீர் வியாபாரி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருநெல்வேலி மாவட்டம் சேந்தமங்கலத்தைச் சேர்ந்த திருமால் நாடார் என்பவரது மகன் நாராயணசாமி (வயது62)
இவர் தனது இருசக்கர வாகனத்தில், பதநீர், நுங்கு ஆகியவற்றை வைத்து விற்பனை செய்து வந்தார்.
பதநீர் விற்பனைக்காக கயத்தாறு, கோவில்பட்டி, எட்டையபுரம், விளாத்திஉளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருவது நாராயணசாமியின் வழக்கம்.
இதையும் படிங்க: தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து; ரூ.10 லட்சம் பொருள் எரிந்து சேதம்
சம்பவத்தன்று, எட்டையபுரத்தில் பதநீர், நுங்கு விற்பனையில் ஈடுபட்டிருந்தவர், மாலையில் வியாபாரம் முடித்து ஊர் திரும்பி உள்ளார்.
கோவில்பட்டி வழியாக சேந்தமங்கலத்துக்கு சென்று கொண்டிருந்த நாராயணசாமி மீது, கேரளாவில் இருந்து தூத்துக்குடிக்கு சென்ற பெட்ரோல் டேங்கர் லாரி மோதியுள்ளது.
இந்த கொடூர விபத்தில் உடல் நசுங்கியவர், சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்த தகவலிலின் பேரில் விரைந்து வந்த நாலாட்டின்புதூர் போலீசார் நாராயணசாமியின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், பெட்ரோல் டேங்கர் லாரியை ஓட்டிவந்த, கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம், செக்காலிவலையைச் சேர்ந்த சச்சின் என்னும் 24வயது லாரி ஓட்டுநரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பதநீர் வியாபாரி சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் ப்ரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.