இளையராஜா மற்றும் ‘எக்கோ’ மற்றும் ‘அகி’ உள்ளிட்ட இசை நிறுவனங்கள் இடையேயான காப்புரிமை பிரச்சனையை இன்னும் தீர்ந்தவாறு இல்லை.
வழக்கில் ஒரு நிலையான தீர்வு வரும் வரை பாடல்களைப் பயன்படுத்த எக்கோ’ மற்றும் ‘அகி’ உள்ளிட்ட இசை நிறுவனங்களுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.மேலும் தயாரிப்பாளரிடம் உரிமை பெற்றும் ஏன் தனது பாடல்களைப் பயன்படுத்தக் கூடாது என இசையமைப்பாளர் கூறுகிறார் என்று இளையராஜா தரப்பில் விளக்கம் அளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து இந்த வழக்கு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷஃபிக் ஆகியோர் இந்த வலக்கை விசாரித்தனர்.
அப்போது, எக்கோ நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன், “இசை அமைத்ததற்கு இளையராஜாவுக்கு தயாரிப்பாளர் ஏற்கனேவே ஊதியம் கொடுத்துவிட்டார். இதனால், தற்போது பாடல்கள் மீதான உரிமை தயாரிப்பாளருக்குச் சென்று விட்டது. தயாரிப்பாளரிடமிருந்து எங்கள் நிறுவனம் உரிமை பெற்றுள்ளதால், பாடல்கள் தங்களுக்கும் சொந்தமாகிவிட்டது” என்று கூறினார்.
இதையும் படிங்க: பாடல்கள் மீதான காப்புரிமை யாருக்கு? இசை யாருக்கு சொந்தம்?
அப்போது இளையராஜா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், “இசையமைப்பு என்பது ஒரு படைப்பு அது எல்லோராலும் செய்ய இயலாது என்பதால் காப்புரிமை சட்டம் இதற்குப் பொருந்தாது” எனக் கூறினார்.
அவர் வாதத்தைக் குறுக்கிட்ட நீதிபதிகள், “அப்படி என்றால் ஒரு பாடல் என்பது பாடலின் வரிகள், பாடலைப் பாடும் பாடகர் என அனைத்தும் சேர்ந்துதான். வரிகள் மற்றும் பாடகர்கள் இல்லை என்றால் பாடல்கள் இல்லை. அப்படி இருக்கும்போது, பாடலுக்குப் பாடலாசிரியரும், பாடகர்களும் உரிமை கோரினால் என்ன ஆகும்?” எனக் கேள்வி எழுப்பினர்.
நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஜூன் இரண்டாவது வாரத்துக்குத் தள்ளிவைத்தநர். மேலும் பாடல்கள் விற்பனை மூலம் இளையராஜா பெற்ற தொகை யாருக்கும் சொந்தம்? என்பது இறுதி தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது என உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.