நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலிகான், ‘இந்திய ஜனநாயக புலிகள்’ கட்சியையும் காங்கிரஸ் உடன் இணைத்து அதன் உறுப்பினர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்திய ஜனநாயக புலிகள் என்று கட்சி துவங்கிய நடிகர் மன்சூர் அலிகான், அதன் பின்னர் நாம் தமிழர் கட்சியில் இணைந்தார். பின்னர் நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறிய நிலையில், அதிமுக உள்ளிட்டக் கட்சிகளுடன் கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடத்தினார். தேர்தலில் போட்டியிட யாரும் வாய்ப்பு தராததால், வேலூர் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டார்.
இந்த நிலையில் ,சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர்செல்வப்பெருந்தகையை சந்தித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், “பூஸ்டர் ஊசி, அடுத்து ஹார்லிக்ஸ் ஊசி என
விதவிதமாக கண்டுபிடித்தது போல முதலில் ஈவிஎம் மிஷின் அடுத்து கன்ட்ரோலிங் யூனிட் என என்னென்னவோடு கொண்டு வருகிறார்கள்.
இதற்கு பேப்பரிலேயே தேர்தல் வச்சுடலாம். பாரத பிரதமரை தூக்கி உள்ளேபோடுங்க. தாய் கழகத்தில் இணைவதற்காக நவம்பரிலேயே கடிதம் கொடுத்திருந்தேன். 15 வருடங்கள் முன்பு காங்கிரஸில் இருந்தேன். கருத்து வேறுபாடு காரணமாக விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன்.
ஆனால், போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியைதொடங்கினேன். என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை ஜெயிச்சிருக்கிறேன் என்று தெரிவித்தார்.