kanchipuram-காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சுவாமி தரிசனம் செய்தார்.
உத்திரபிரசேத மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டை செய்து வைத்தார்.
ராமர் கோயில் திறப்பு விழாவுக்கான பூஜைகள் கடந்த 16 ஆம் தேதி தொடங்கின. 6 நாட்களாக பல்வேறு பூஜைகள் நடந்த நிலையில்,7 ஆவது நாளான இன்று பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க அரசியல், சினிமா, விளையாட்டு என பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் 7 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த நிலையில்,அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள,மத்திய நீதி துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகை புரிந்தார்.
தொடர்ந்து காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் அருகே உள்ள உபநிஷத் மடத்திற்கு சென்று அங்கு உள்ள ராம மந்திரம் எந்திரத்தையும்,ராமரிடம் பணிவாக உபதேசம் கேட்கும் ஆஞ்சநேரையும் தரிசனம் செய்து வழங்கினார்.
இதையும் படிங்க :http://Ramadoss-”TNPSC புள்ளியியல் பணி தேர்வு..” பணி ஆணை எங்கே ?
பின்னர் காஞ்சிபுரம்(kanchipuram) வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சென்று அங்கு பெருந்தேவி தாயாரையும்,அத்திகிரி மலையில் உள்ள வரதராஜ பெருமாளையும் வணங்கி வழிபட்டார்.
இதனைத் தொடர்ந்து காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர், காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் இருந்தபடி,
அயோத்தியில் ராமர் பிரதிஷ்டை செய்யப்படுவதை நேரலையாக காண ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால், எல்.இ.டி திரை மூலம் அயோத்தியில் நடைபெறும் விழாவை நேரலை செய்ய முன்னரே அனுமதி பெறவில்லை என்ற காரணத்தை சுட்டிக்காட்டி தமிழக காவல்துறை அந்த எல்.இ.டி திரையை அகற்றினர்.
https://x.com/ITamilTVNews/status/1749340123932848594?s=20
தொடர்ந்து கோவில்களில் அயோத்தி விழாவை நேரலை செய்ய எந்த அனுமதியும் தேவையில்லை என நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து
மீண்டும் பிரமாண்ட திரை அமைக்கப்பட்டு ராமர் பிரதஷ்டை செய்யும் நிகழ்வானது நேரலை செய்யப்பட்டது.
அப்போது தியாகராஜர், சதாசிவ பிரம்மேந்திரர், அருணாச்சல கவி, பத்ராசல ராமதாசு, அன்னமாச்சார்யா மற்றும் புரந்தர தாசர் உள்ளிட்ட கலைஞர்களின் கீர்த்தனைகளும்,
சிலப்பதிகாரம் காவியத்தின் வசனங்களும் பாடப்பட்டன.இதனை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் பார்த்து மகிழ்ச்சியடைந்தார்.