அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீதான கொலை முயற்சியில் வெளிநாடுகளின் சதி இல்லை என FBI தகவல் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் தற்போது பிரதமர் தேர்தல் கலைக்கட்டியுள்ள நிலையில் அதிபர் பதவிக்கு போட்டியிட்டு வரும் கட்சிகள் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது .
இதில் தற்போதையே அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்க்கும் பலமான போட்டி நிலவி வந்த நிலையில் இந்த தேர்தலில் இருந்து ஜோ பைடன் விலகி அவருக்கு பதில் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் களமிறங்கி உள்ளார் .
இந்நிலையில் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்ட டொனால்டு டிரம்ப் பேசிக்கொண்டிருந்தபோது அவர் மீது கடந்த சில நாட்களுக்கு முன் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது .
இந்த தாக்குதலில் காயமடைந்த டிரம்ப் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் . இதையடுத்து டிரம்ப் மீது தாக்குதல் நடத்திய நபரை உடனடியாக துப்பாக்கிச்சூடு நடத்திய சிறப்பு பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர் .
இந்நிலையில் டொனால்ட் ட்ரம்ப் மீது நடந்த துப்பாக்கிச் சூட்டில் வெளிநாடுகளின் சதி, தொடர்பு எதுவும் இல்லை. அங்கு துப்பாக்கிச்சூடு நடத்திய தாமஸ் க்ரூக்ஸ் தனித்தே இயங்கியுள்ளார் என FBI தகவல் தெரிவித்துள்ளது .
தாமக்ஸ் க்ரூக்ஸ் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட, நிலையில் அவர் ட்ரம்ப்-ஐ குறிவைக்க என்ன காரணம் என்பது இன்னும் தெளிவாகவில்லை.