Palani Murugan Temple-பழனி முருகன் கோவிலுக்குள் இந்து அல்லாதவர்கள் மற்றும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் வர அனுமதிக்க கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.
பழனி முருகன் கோவில்:
தமிழ்க்கடவுள் என்று அழைக்கப்படும் முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி முருகன் கோயில் உள்ளது.
தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதாகவும் உண்டியல் காணிக்கையில் முதல் இடம் பிடிக்கும் இக்கோயில் உலக புகழ்பெற்றது.
இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பல்வேறு சிறப்புகளுக்கு சொந்தமான அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலில்,
2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இதையும் படிங்க:UGC issue-சமூகநீதியை ஒழிக்க ஒன்றிய பி.ஜே.பி. அரசின் தந்திரம்! -கி.வீரமணி
முருகன் கோவில் அறிவிப்பு பலகை சர்ச்சை :
பழனி முருகன் கோயிலில் இந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிப்பு பலகை ஒன்று இருந்தது. அந்த பலகையானது அங்குள்ள அதிகாரிகளால் முன்பு அகற்றப்பட்டது.
இதனையடுத்து பழனியை சேர்ந் செந்தில் குமார் என்ற நபர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில் இந்து அறநிலைத்துறை சட்டத்தின் படி, ‘இந்து அல்லாதவர்கள் இந்து கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் , வேறு மத கடவுளை வணங்குவோர்கள் கோவிலுக்குள் வருவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது’ என குறிப்பிட்டு
இந்து அல்லாதவர்கள் பழனி முருகன் கோவிலுக்குள் வருவதை தடை செய்ய வேண்டும் என வழக்கு தொடரப்பட்டு இருந்தது.
இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1752200004914295234?s=20
தமிழக அறநிலையத்துறை மேல்முறையீடு:
கடந்த ஜூலை மாதம் இந்த வழக்கு விசாரணை வந்தது. இதனை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு இந்து அல்லாதோர் பழனி முருகன் திருக்கோவிலுக்குள் வருவதை தடை விதித்தது.
மேலும் பலகையை மீண்டும் வைக்க உத்தரவிடப்பட்டது. இதனை எதிர்த்து தமிழக அறநிலையத்துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
நீதிமன்றம் உத்தரவு :
இந்த வழக்கானது மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்து அல்லாதோர் பழனி முருகன் கோவில்(Palani Murugan Temple) கொடிமரம் தாண்டி உள்ளே செல்ல அனுமதிக்க வேண்டாம் என்றும்,
அதனையும் மீறி மாற்று மதத்தினர் கோவிலுக்குள் வர விரும்பினால் அதற்கான தனி வருகை பதிவேடு வைத்து
அதில், மீது நம்பிக்கை கொண்டு தரிசனம் செய்ய வருகிறேன் என உறுதிமொழி கையெழுத்திட்ட பின்னர்
கோவிலுக்குள் அனுமதிக்கப்படலாம் என கட்டுப்பாடுகளை விதிக்க உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி உத்தரவிட்டுள்ளார்.