North chennai வடசென்னை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் நாங்களும் மனுத்தாக்கல் செய்வோம் என்று பா.ஜ.கவினர் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.வடசென்னை தொகுதிக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்காக பங்குனி உத்திரத் திருநாளான இன்று திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் வரிசை கட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க :யார் முதலில் மனுதாக்கல் செய்வது? திமுக – அதிமுக வேட்பாளர்களுக்குள் போட்டி
இந்த நிலையில் மனுத்தாக்கலின் போது தாங்கள்தான் முன்கூட்டியே வந்ததாகக் கூறி திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் தேர்தல் நடத்தும் அலுவலரின் முன்பாகவே பிரச்சனையில் ஈடுபட்டனர். யார் முன்கூட்டியே வந்தார்கள் என்பதை ஆவணங்களைப் பார்த்து தேர்தல் அதிகாரி கூறியும், திமுக தரப்பு ஏற்றுக் கொள்ளாததால் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க: JustNow |மூட்டையாக வந்த பாஜக கொடி, தொப்பிகள் பறிமுதல்
இந்தப் பிரச்சனைகளுக்கு மத்தியில் மனுத்தாக்கல் செய்ய காலதாமதம் ஆகிக் கொண்டிருந்ததால், காத்துக் கொண்டிருந்த பா.ஜ.க தரப்பினர், தங்கள் மனுவை ஏற்றுக் கொள்ளவேண்டும் ஆவேசமாக குரல் கொடுத்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.
இதனிடையே 5வது எண் கொண்ட வேட்பாளரிடம் இருந்து தேர்தல் நடத்தும் அலுவலர் மனுவினைப் பெற்றுக் கொண்டார்.