இந்திய ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் நிதி நடவடிக்கைகளைத் திட்டமிடுவதை உறுதி செய்வதற்காக நவம்பர் மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதன்படி, நவம்பர் மாதத்தில் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்றும், இந்த விடுமுறை நாட்கள் நாடு முழுவதும் பொருந்தாது என்றும் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு மாநிலத்தையும் பொறுத்து வங்கி விடுமுறை நாட்கள் மாறுபடும். அந்த வகையில்,
- நவம்பர் 1: கன்னட ராஜ்யோத்சவா/குட்/கர்வா சௌத் (கர்நாடகா, மணிப்பூர், ஹிமாச்சல பிரதேசம்)
- நவம்பர் 5: ஞாயிறு
- நவம்பர் 10: வாங்கலா திருவிழா (மேகாலயா)
- நவம்பர் 11: 2-வது சனிக்கிழமை
- நவம்பர் 12 : ஞாயிறு / தீபாவளி
- நவம்பர் 13: கோவர்தன் பூஜை/லக்ஷ்மி பூஜை (திரிபுரா, உத்தரகாண்ட், சிக்கம், மணிப்பூர், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம்)
- நவம்பர் 14: விக்ரம் சம்வந்த் புத்தாண்டு தினம்/லக்ஷ்மி பூஜை (குஜராத், மகாராஷ்டிரா, சிக்கிம், கர்நாடகா)
- நவம்பர் 15: பைடூஜ்/சித்ரகுப்த ஜெயந்தி/லக்ஷ்மி பூஜை (சிக்கிம்)
- நவம்பர் 19: ஞாயிறு
- நவம்பர் 25: 4-வது சனிக்கிழமை
- நவம்பர் 26: ஞாயிறு
- நவம்பர் 20: சாத் (காலை அர்க்யா) (பீகார், ராஜஸ்தான்)
- நவம்பர் 23: செங் குட்ஸ்னெம்/எகாஸ்-பக்வால் (உத்திரகாண்ட், சிக்கிம்)
- நவம்பர் 27: குருநானக் ஜெயந்தி/கார்த்திகா பூர்ணிமா/ரஹஸ் பூர்ணிமா (திரிபுரா, மிசோரம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஒரிசா, சண்டிகர், உத்தரகாண்ட், ஹைதராபாத் – தெலுங்கானா, ராஜஸ்தான், ஜம்மு, உத்தரபிரதேசம், வங்காளம், மகாராஷ்டிரா, புது தில்லி, பீகார், ஜார்கண்ட், ஹிமாச்சல பிரதேசம்)
- நவம்பர் 30: கனகதாச ஜெயந்தி (கர்நாடகா)
இந்த விடுமுறை நாட்களில், வாடிக்கையாளர்கள் நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் அல்லது UPI போன்ற ஆன்லைன் சேவைகளைப் பயன்படுத்தி வங்கி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம் என்றும், ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கும் எந்த தடையும் இருக்காது என்றும் தெரிவித்துள்ளது.