சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி தற்போது தீவிரமாக பெய்து வரும் நிலையில் கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றம் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியதாக நேற்று வலுப்பெற்றது.
இந்த தாழ்வு பகுதியானது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை தெற்கு வங்கக்கடலில் மத்திய பகுதியில் காற்றழுதத தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது .
இந்நிலையில் நவ. 26, 27 ஆகிய தேதிகளில் இந்தத் தாழ்வு மண்டலம் நகரும் பாதையில் சற்று மாற்றம் ஏற்பட்டு வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் இலங்கைக் கடற்கரையை நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது .
Also Read : நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்..!!
தமிழகத்தை நோக்கி காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நெருங்கிவரும் நிலையில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, பாம்பன், தூத்துக்குடி உள்பட ஒன்பது துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழ்நாட்டிற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கனமழை பெய்யும் மாவட்டங்களில் அந்தந்த ஆட்சியர்கள் பள்ளி மற்றும் கல்லுரிகளுக்கு விடுமுறை அளிக்க தமிழ்நாடு அனுமதி அளித்துள்ளது.