மதுரையில் ஈபிஎஸ் தலைமையில் அதிமுக மாநில மாநாடு இன்று நடைபெறும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம், தன்னால் நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகளுடன் மேற்கு மண்டலத்தில் மாநாடு நடத்துவது குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டம் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மண்டபத்தில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. முன்னதாக, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் திருச்சியில் ஒரு மாநாட்டை நடத்தியிருந்தார்.
இந்நிலையில், இன்று எடப்பாடி பழனிசாமி தென் மாவட்டங்களில் தனது பலத்தை நிரூபிக்கும் வகையில், மதுரையில் பல லட்சம் தொண்டர்களுடன் எழுச்சி மாநாட்டை நடத்துகிறார்.
இதேபோன்று, மேற்கு மண்டலத்தில் ஓபிஎஸ் தனது பலத்தை நிரூபிக்கும் விதமாக அடுத்த மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த மாநாடு தொடர்பாக, இன்று மாலை 6 மணிக்கு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மண்டபத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
அத்துடன், அந்த கூட்டத்தில் சில முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.