இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒருபுறம் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரிக்கும் நிலையில், கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இந்தியாவில் நேற்று 27,553 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் இன்று 33, 750 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3,48,89,132 லிருந்து 3,49,882 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 10,846 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.நாடு முழுவதும் குணமடைந்தோர் எண்னிக்கை 3,42,84,561 லிருந்து 3,42,95,407 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 123 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 4,81,770லிருந்து 4,81,893 ஆக உயர்ந்துள்ளது.நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,45,582 ஆக அதிகரித்துள்ளது.இந்தியாவில் இதுவரை 1,700 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.ஒமைக்ரான் தொற்றில் இருந்து 639 பேர் குணமடைந்த நிலையில் 1,061 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிகபட்சமாக ஒமைக்ரான் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் விவரம்:
மராட்டியம் – 510, டெல்லி -351, கேரளா – 156, குஜராத் – 136, தமிழகம் -121, ராஜஸ்தான் -120, தெலுங்கானா -67, கர்நாடகா -64, அரியானா -63, ஒடிசா -37 பேருக்கு பாதிப்பு பதிவாகி உள்ளது.