விரைவில் ஓமிக்ரான் பேரலை வீசும் என்றும் அதை தடுப்பதற்காக ஏற்கெனவே போடப்பட்ட தடுப்பூசிகள் 2 டோஸ்களும் ஓமிக்ரானுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்காது என்று பிரிட்டன் பிரதமர் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ், டெல்டா, டெல்டா பிளஸ், என அடுத்தடுத்த வைரஸ் தொற்றுக்களின் வரிசையாக தற்போது ஓமிக்ரான் வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது.
ஓமிக்ரான் வைரஸ் உலக நாடுகளில் பரவியுள்ளதை அடுத்து பிரிட்டனில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விரைவில் ஓமிக்ரான் பேரலை வீசும் என்றும் அதை தடுப்பதற்காக ஏற்கெனவே போடப்பட்ட தடுப்பூசிகள் 2 டோஸ்களும் ஓமிக்ரானுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்காது என்றும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு உருமாறிய டெல்டா, டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ்களை விட ஓமிக்ரான் வைரஸ் பரவும் தன்மை அதிகமாக உள்ளது என்று மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ள நிலையில், அனைத்து உலக நாடுகளும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.