ITamilTv

தமிழகத்திலும் கால் பதித்தது ஒமைக்ரான்..! – எச்சரிக்கும் சுகாதாரத்துறை

Omicron per person in Tamil Nadu.

Spread the love

தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தொற்று சீனா, அமெரிக்கா உள்ளிட்ட 40ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ள நிலையில், இந்தியாவில் டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் நைஜிரியாவில் இருந்து வந்தவருக்கு கொரோனா தொற்று இருக்குமோ என்ற சந்தேகத்தில் அவருடன் தொடர்புடைய 7 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் இது குறித்து கூறிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,
தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் நைஜீரியாவில் இருந்து வந்த நபரோடு தொடர்பில் இருந்த மேலும் 7 பேருக்கு புதிய வகை கொரோனா இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார்.

Omicron-per-person-in-Tamil-Nadu.
Omicron per person in Tamil Nadu.

ஒமைக்ரான் உறுதியான நபருடன் தொடர்பில் இருந்த 7 பேரின் மாதிரிகளும் பரிசொதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ள நபர் லேசான அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கர்நாடகா, ஆந்திரா, கேரளா , தெலுங்கானா உள்ளிட்ட 10 மாநிலங்களில் 69 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.


Spread the love
Exit mobile version