ஜனவரி 3 முதல் அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி, கல்லூரிகள் மற்றும் தொழில் நுட்ப பயிற்சி நிறுவனங்களில் சுழற்சி முறை ரத்து செய்யப்படும் என்றும் கொரோனா கால கட்டத்திற்கு முந்தைய நடைமுறைப்படி இயல்பாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதை அடுத்து செப்டம்பர் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புக்கள் தொடங்கப்பட்டு சுழற்சி முறையில் நடைபெற்று வருகின்றன.
பல மாதங்களாக மாணவ, மாணவியர்கள் பள்ளி செல்லாமல் தொடர்ந்து வீட்டிலேயே இருப்பதால் அவர்கள் பெரும் மன அழுத்தத்தில் இருப்பதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பிரச்சனைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு ஜனவரி 3ம் தேதி முதல் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புகளுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் சுழற்சி முறை வகுப்புகள் ரத்து செய்யப்படும் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் ஊரடங்கின் காரணமாக பல மாதங்களாக மாணவர்கள் பள்ளி செல்ல இயலவில்லை.
இதனால் அவர்களின் கற்றல் திறன் குறைந்துள்ளது. அவர்களது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஜனவரி 3 முதல் அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி, கல்லூரிகள் மற்றும் தொழில் நுட்ப பயிற்சி நிறுவனங்களில் சுழற்சி முறை ரத்து செய்யப்படும் என்றும் . கொரோனா கால கட்டத்திற்கு முந்தைய நடைமுறைப்படி இயல்பாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.