மாறுபாடடைந்த ஒமிக்ரான் தொற்று பரவல் வேகம் அபாய கட்டத்தை எட்டியுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவின் உருமாற்றமான டெல்டா வகை வைரஸும் பல்வேறு நாடுகளுக்கு பரவி மிகபெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது.
இதனை அடுத்து இந்த கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நாடுகளும் நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இந்நிலையில் கொரோனா தொற்று சற்று குறைவடைந்து உலக நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் சில நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது.
இந்த நிலையில் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட மற்றுமொறு புதிய வகை கொரோனாவன ஒமைக்ரான் வைரஸ் 100 ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மீண்டும் உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில், டெல்டா பிளஸ் வைரசை விட ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டது எனவும் ஆனாலும் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றும் ஏற்கனவே மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர். இதனை அடுத்து ஒமைக்ரான் பரவுவதை தடுக்க பல்வேறு நாடுகளும் மீண்டும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தத் தொடங்கிள்ளன.
இந்நிலையில் மாறுபாடடைந்த ஒமிக்ரான் தொற்று பரவல் வேகம் அபாய கட்டத்தை எட்டியுள்ளது என்றும் டெல்டா வைரசை விட ஒமிக்ரான் பரவல் விகிதம் பல்வேறு நாடுகளில் அதிகரித்துள்ளது எனவும் உலக சுகாதார அமைப்பு கவலை அளித்துள்ளது.