தமிழ்நாட்டில் ஒரு கோடி பேருக்கு நீரிழிவு நோய் இருப்பதாக ஐசிஎம்ஆர் ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நமது முன்னோர்கள் காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் எந்த நோய் நொடியும் இல்லாமல் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்ந்து மறைந்தார்கள் . அவர்களின் அந்த ஆரோக்கியத்திற்கு உணவு முறைகளே முக்கிய பங்காற்றின . சுத்தமான காற்றும் , இயற்கை முறையில் விளைந்த உணவும் , உடலுழைப்பும் மனிதனின் ஆயுள் கூட முக்கிய காரணமாக அமைந்துள்ளது .
ஆனால் இன்றைய தலைமுறைக்கு ஆரோக்கியம் 50 சதவீதம் கூட இல்லை இதனால் இன்றைய தலைமுறையினரின் ஆயுள் காலமும் குறைந்துகொன்டே வருகிறது . சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எதாவது ஒரு நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் .
அதிலும் குறிப்பாக இன்றைய தலைமுறையினரை அச்சுறுத்தி வரும் நோய்களில் மிக முக்கியமானது சர்க்கரை நோய். இந்த நோயால் உலகில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு இந்தியா தான் . அதுவும் நம் தமிழகத்தில் அதிகம் பேரை இந்த நோய் பாதித்துள்ளது .

இந்த சர்க்கரை நோய் ஒருவருக்கு வந்து விட்டால் அவர்களின் வாழ்நாள் முழுவதும் மருந்து மாத்திரையுடன் தான் வாழ்ந்தாக வேண்டும். இந்நிலையில், இந்தியாவில் சர்க்கரை நோய் தொடர்பாக ஐ.சி.எம்.ஆர். நடத்திய ஆய்வு ஒன்று மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்தியாவில் 10 கோடி (11.4%) பேருக்கு நீரிழிவு நோய் இருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கபட்டுள்ளது நகர்ப்புறங்களில் 16.4% பேர், கிராமங்களில் 8.9% பேருக்கு நீரிழிவு நோய் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
நீரிழிவு பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு 5வது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டு மக்கள் தொகையில் 14.4% பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், ஒரு கோடி பேருக்கு நீரிழிவு நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் ஆய்வில் தெரியவந்துள்ளது .