தமிழ்நாட்டில் BE., B.Tech உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆன்லைனில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது .
.பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை பட்டியல் ஜூலை 10 ஆம் தேதி வெளியான நிலையில் ஜூலை 22 ஆம் தேதி இன்று முதல் பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சிலிங் தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் நடப்பாண்டுக்கான பொறியியல் கவுன்சிலிங் ஜூலை 22ஆம் தேதி இன்று முதல் செப்.11ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
அரசுப் பள்ளி சிறப்பு இட ஒதுக்கீடு பிரிவினருக்கான கலந்தாய்வு 22 மற்றும் 23ல் நடைபெறுகிறது
மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்களுக்கும் 22 மற்றும் 23ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறவுள்ளது
பொதுப்பிரிவு மாணவர்களுக்கு 25 முதல் 27 வரை கவுன்சிலிங் நடைபெறும்
Also Read : பட்டய கணக்காளர் தேர்வில் தேர்ச்சி பெற்ற டீக்கடைக்காரரின் மகள்..!!
அண்ணா பல்கலை.க்கு உட்பட்ட கல்லூரிகளில் பி.இ., பி.டெக் உள்ளிட்ட படிப்புகளுக்கு ஆன்லைனில் இந்த கவுன்சிலிங் நடைபெறுகிறது.
பொதுக் கல்வி, தொழில்முறைக் கல்வி, 7.5% இட ஒதுக்கீடு மாணவர்களுக்கு 29 முதல் செப்.3 வரை கலந்தாய்வு நடைபெறுகிறது
பொறியியல் படிப்புகளுக்கான துணைக் கலந்தாய்வு செப்.6 முதல் செப்.8 வரை நடைபெற உள்ளது.
தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://tneaonline.org என்ற முகவரியில் கலந்தாய்வு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.