ஆன் லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை எதிர்த்த வழக்குகளின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம்(Madras High Court) தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.
தமிழ் நாடு அரசு ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்து பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த சட்டத்தை இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரமில்லை எனவும், திறமைக்கான விளையாட்டான ரம்மியை, சூதாட்ட விளையாட்டாக கருத முடியாது என ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில், தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ,அரசு சார்பில், இந்த சட்ட கொண்டு வர தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு என்றும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டால் தற்கொலைகள் அதிகரித்து வருகிறது. மேலும் பொது மக்களின் கோரிக்கைகளுக்கு இணங்க இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள்,”எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்வதற்காக விசாரணையை தள்ளி வைத்ததுதேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.