ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாகத் தேவையான சட்டங்களை இயற்ற மாநில அரசுகளுக்கு உரிமை உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழ் நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை கூறும் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் அந்த மசோதாவைத் தமிழ்நாடு அரசிற்கு ஆளுநர் திருப்பி அனுப்பியது சர்ச்சை ஏற்படுத்தியது.
இது தொடர்பாகச் சட்டம் இயற்றுவதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என ஆளுநர் RN ரவி கூறி இருந்தார். இந்த நிலையில் திமுக மக்களவை உறுப்பினர் பார்த்திபன் மக்களவையில் இது குறித்து கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்த நிலையில் அமைச்சர் அனுராக் தாக்கூர்( Anurag Thakur) எழுத்துப்பூர்வமாகப் பதில் அளித்து இருந்தார். அந்த விளக்கத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை வரம்பிற்குள் கொண்டு வரச்சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது.
மேலும் பந்தயம் ,சூதாட்டம் அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் 7 ஆவது அட்டவணையில்
34-வதி பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து ஏழாவது அட்டவணையில் உள்ள 34 ஆவது பிரிவுகளை அம்சங்களை ஒழுங்கு படுத்துவதற்காகத் திட்டங்களை மாநில அரசு இயற்ற முடியும்.
மேலும் சில மாநிலங்கள் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுதிற்க்கு எதிராகச் சட்டங்களை இயற்றியுள்ளன. மேலும் திறமை, அதிர்ஷ்டத்தின் அடிப்படையிலான விளையாட்டுக்களுக்கு வேறுபாடுகள் இருப்பதை நீதிமன்றங்கள் உறுதி செய்துள்ளன.
குறிப்பிட்டுள்ள விளையாட்டுகளுக்குத் திறன் வகுக்கப்பட்டுள்ளது என்றால் அது திறன் விளையாட்டு என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் அதிர்ஷ்டத்தின் அடிப்படையில் வரையறுக்கப்பட்டுள்ள விளையாட்டுகள் அனைத்தும் சூதாட்டங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது இன்று அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்