ஜனவரி முதல் வாரம் புதிய பாம்பன் பாலம் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சுமார் ₹550 கோடி செலவில் புதிய பாம்பன் பாலம் கடந்த சில மாதங்களாக கட்டப்பட்டு வந்த நிலையில் கட்டுமான பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையடுத்து தற்போது புதிய பாம்பன் பாலத்தை ஆய்வு செய்யும் பணி தீவிரவாக நடைபெற்ற வந்த நிலையில் ஜனவரி முதல் வாரம் புதிய பாம்பன் பாலம் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Also Read : சென்னையில் பரபரப்பு – வாக்கில் ஊழியருக்கு விழுந்த கத்திக்குத்து..!!
ஹீப்ளி – ராமேஸ்வரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் 2025 ஜனவரி 4 ஆம் தேதி முதல் இயக்கம் என அட்டவணை வெளியானதால் புதிய பாலம் திறக்கப்படலாம் என கூறப்படுகிறது.
மேலும் புதிய பாம்பன் பாலம் திறப்பு குறித்த தேதி விரைவில் வெளியாகும் என மதுரை ரயில்வே கோட்ட கூடுதல்மேலாளர் எல்.என்.ராவ் தகவல் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
பாம்பன் புதிய பாலத்தில் ரயில் இன்ஜினை இயக்கி ஆய்வு செய்த அர்.வி.என்.எல் அதிகாரிகள். புதிய பாலத்தில் உள்ள சிறு குறைபாடுகளை சரி செய்ய உத்தரவிட்டுள்ள நிலையில் பாம்பன் பாலம் திறப்பு குறித்த தகவல் தற்போது விவாதத்திற்குள்ளாகி உள்ளது.