தமிழகத்தில், வரும் 21ம் தேதி 6 மாவட்டங்களுக்கும், 22ம் தேதி 4 மாவட்டங்களுக்கும், மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்ச் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில் இலங்கை மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் படி புதுக்கோட்டை, விருதுநகர், திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, சேலம், மதுரை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில், நாளை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 21ம் தேதி ராமநாதபுரம், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மற்றும் மதுரை மாவட்டங்களில், இடி மின்னலுடன் கூடிய மிக கனமழையும் நீலகிரி, கோவை, திருப்பூர்,சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் வரும் 22ம் தேதி நாமக்கல், தர்மபுரி, கள்ளக்குறிச்சி சேலம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும், கடலூர், விழுப்புரம், கன்னியாகுமரி, நீலகிரி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர் கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரித்துள்ள வானிலை மையம், சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.