தமிழ்நாட்டிற்கு நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் (Orange alert for Tamil Nadu) விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ள அபாய எச்சரிக்கை
வைகை அணை, அதன் முழு கொள்ளவை எட்டிய நிலையில், ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 தென் மாவட்டங்களில் ஆற்றின் கரையோரம் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லாமல் வெள்ளிக்கிழமை ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்பட்டது.
தமிழகத்திற்கு நாளை ஆரஞ்சு அலெர்ட்
தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு இரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் (Orange alert for Tamil Nadu) விடுக்கப்பட்டுள்ளது.
இலக்கை சென்றடையும் ஆதித்யா
ஆதித்யா எல் 1 விண்கலம் இன்று தனது இலக்கை சென்றடைகிறது. இன்று மாலை விண்கலம் சுற்று வட்டப்பாதையில் சூரியனை நோக்கி நிலை நிறுத்தப்படும்.
அடுத்த 5 ஆண்டுகளுக்கு சுற்று வட்டப்பாதையில் சுற்றியபடி ஆதித்யா விண்கலம் ஆய்வுகளை மேற்கொள்ளும். ஆதித்யா விண்கலம் கடந்த செப். 2ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.
ரயில் மீது மர்மநபர்கள் கல்வீச்சு
சென்னை, திருவொற்றியூர் அருகே சென்ட்ரல் நோக்கி சென்று கொண்டிருந்த காவேரி எக்ஸ்பிரஸ் ரயில் மீது மர்மநபர்கள் கல்வீச்சு தாக்குதல் நடத்தி உள்ளனர்.
7 ரயில் பெட்டிகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய நபர்கள் மீது சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
டி20 உலக கோப்பை – அட்டவணை வெளியீடு
டி20 உலக கோப்பை போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஜூன் 9ம் தேதி இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள 2024 டி20 உலக கோப்பை தொடரில், இந்திய அணி விளையாடவுள்ள அனைத்துப் போட்டிகளும் இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கும்!
இதையும் படியுங்க : https://itamiltv.com/tn-dgp-shankar-jiwal-has-ordered-the-transfer-of-police-officers-who-have-been-working-in-the-same-police-station-for-three-years/
ஜல்லிக்கட்டு போட்டி
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.
சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்டோர் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தனர்.
நாளை முதல் டோக்கன் விநியோகம்
பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்கப்படும் ரூ.1000க்கு நாளை முதல் டோக்கன் விநியோகம் செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம் செய்யப்படும். அந்த டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் பயனாளிகள் ரேஷன் கடைகளுக்குச் சென்று பரிசு தொகுப்பைப் பெறலாம்.
சங்கர் ஆத்யா கைது
மேற்கு வங்கத்தில் பொது விநியோக திட்ட முறைகேடு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் சங்கர் ஆத்யா கைது செய்யப்பட்டுள்ளார்.