மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், அதன் காரணமாக பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்நாட்டில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், ஆயிரக்கணக்கானோர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க தேசிய பேரிடம் மீட்புக்குழுவினர் மற்றும் ராணுவத்தினர் களமிறக்கப்பட்டு மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
இதேபோன்று, கடந்த வாரம் தெற்கு கிவு மாகாணத்தில் பெய்த திடீர் கனமழையால் நதிக்கரையோரம் உள்ள நியாமுகுபி, புஷூஷூ ஆகிய 2 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்யது.
இந்நிலையில், தற்போது பெய்து வரும் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
கனமழையால், சேறும் சகதியுமாக காட்சியளிக்கும் கிராமங்களில் இருந்து தொடர்ந்து சடலங்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில், சுமார் 5,500 பேர் பற்றிய விவரங்கள் தெரியவரவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த அரசு அதிகாரிகள், நிதியுதவியும், நிவாரண பொருட்களையும் வழங்கி வருகின்றனர்.