கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த சு.செல்வம் அவர்கள் நடிகர் விவேக் நினைவு நாள் முன்னிட்டும், அவரது கனவான மரம் வளர்ப்பு பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மரத்தில் மார்க்கர் ஸ்கெட்ச் பொருத்தி “மரமே ஓவியராக மாறி வரைவது போன்று” ஓவியர் செல்வம் தன் கையில் இருக்கும் அட்டையை மரத்தில் பொருத்தப்பட்ட மார்க்கரில் வைத்து அசைத்து அசைத்து நகர்த்தி நடிகர் விவேக் படத்தை வரைந்தார்.
நடிகர் விவேக்கின் நகைச்சுவை திறமை ரசிகர்கள் மனதை விட்டு அவ்வளவு சீக்கிரம் அகலாது. தன்னுடைய நகைச்சுவை நடிப்பில் காமெடி மட்டுமல்ல பல சமூக கருத்துக்களையும், பகுத்தறிவனை நகைச்சுவையாக சொன்னவர். விவேக்கின் இன்னொரு பக்கம் அனைவரும் அறிந்தது மரம் வளர்ப்பு பணி ஆகும்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர் வழியில் பயணித்த நடிகர் விவேக் அப்துல் கலாம் ஐயா ஒப்படைத்த மரம் வளர்ப்போம் பணியை தனது மூச்சிருக்கும் வரை செய்தார்.மரம் வளர்ப்பதை அனைவரும் மனதிலும் விதைத்தவர், இயற்கை முக்கியத்துவத்தை பறைசாற்றியவர் விவேக் ஆவர்.
இதையும் படிங்க: “மகளிர் இலவச பேருந்து பயணச் சீட்டில் முதல்வர் ஓவியம்” கள்ளக்குறிச்சி ஓவியர் அசத்தல்!
நடிகர் விவேக் நினைவு நாள் முன்னிட்டும், அவரது கனவான மரம் வளர்ப்பு பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மரத்தில் மார்க்கர் ஸ்கெட்ச் வைத்து,”மரமே ஓவியராக மாறி வரைவது போன்று” ஓவியா ஆசிரியர் செல்வம் தன் கையில் இருக்கும் அட்டையை அந்த மரத்தில் இருக்கும் மார்க்கர் ஸ்கெட்ச்யில் வைத்து நடிகர் விவேக்கின் முக தோற்றத்திற்கு ஏற்ப அட்டையை அசைத்து, அசைத்து நகர்த்தி “மரமே ஓவியராக மாறி” நடிகர் விவேக் படத்தை வரைவது போன்று ஐந்து நிமிடங்களில் ஓவிய ஆசிரியர் செல்வம் வரைந்தார்.
இந்த ஓவியத்தை பார்த்த பொதுமக்கள், மாணவர்கள் மரங்களின் காதலன் விவேக் உருவத்தை மரமே வரைவது போன்று வரைந்த ஓவிய ஆசிரியர் செல்வம் அவர்களை பாராட்டினார்கள்.