கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகளுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் (Palanivel Thiagarajan) புகைபடம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான இன்று காஞ்சிபுரம், பச்சையப்பன் ஆடவர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் மகளிர் பயன்பெறும் வகையில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ 1000/- வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைத்து, 13 மகளிருக்கு வங்கி பற்று அட்டைகளை (ATM Cards) வழங்கினார்.
இதனைதொடர்ந்து,மதுரையில் இதனை தொடர்ந்து மதுரையில் தகவல் தொழில்நுட்பம் & டிஜிட்டல் சேவைகள் அமைச்சர் பழனிவேல் தியாராகராஜன் தொடங்கி வைத்தார்.பிறகு மகளிர் உரிமை தொகை திட்டதை பெற்று கொண்ட பயனாளிகளுடன் செல்ஃபி எடுத்து கொண்டார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்:
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சிந்தனை லட்சியமான கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம், தகுதியான பெண்களுக்கு ரூ.1000 வழங்குவது, அவரது அர்ப்பணிப்பு அயராத முயற்சியால் நனவாகியுள்ளது. இந்தத் திட்டத்தைக் கருத்திற் கொண்டு, உரிமைத் தொகை (உரிமை என மானியம்) எனப் பெயரிடும் செயல் என்ற பெருமையும் பாராட்டும் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கே உரித்தானது.
வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் சம உரிமை பெற்ற பெண்களை சமமான குடிமக்களாக அங்கீகரிப்பது திராவிட இயக்கத்தில் சமூக நீதி பற்றிய நமது புரிதலுக்கு அடிப்படையாகும். அறிஞர் அண்ணா வழியில் நடப்பவர், நமது அறிஞர் முதல்வர்திராவிட இயக்கத்தின் நோக்கம் மற்றும் நோக்கங்களை நன்கு அறிந்தவர், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையும் (செப்டம்பர் 15) அவர் பிறந்த இடத்தையும் (காஞ்சிபுரம்) தேர்ந்தெடுத்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.