மழை குறித்த அப்டேட் (weather) இனி பஞ்சாயத்து வாரியாக தெரிந்துகொள்ள முடியும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பருவ மழை காலத்தில் மழை குறித்த தகவல்களை தினம் தோறும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு வருகிறது.
சாரல் மழை முதல் கனமழை, புயல் வரை முன்கூட்டியே கணித்து அவ்வப்போது வானிலை மையம் தெரிவித்து வருகிறது. இதனால் பொது மக்கள் அன்றாட வேலைகளை அந்தந்த கால நிலைகளுக்கு ஏற்ப திட்டமிட பெரும் உதவியாக உள்ளது.
முன்னதாக தொலைக்காட்சி மற்றும் ரேடியோக்கள் மூலமாகவே இது குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது.
ஆனால் தற்போது சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் இந்த வானிலை குறித்த அப்டேட்கள் வெளியிடப்பட்டு வருகிறது.
இதனால் காலநிலை மாற்றத்தால் எற்படும் பேரிடர்களில் இருந்து மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க இந்த வானிலை முன்னறிவிப்பு (weather) பெரிதும் உதவிகரமாக உள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது 150 ஆண்டை நிறைவு செய்ய உள்ளது.
அதைக் கொண்டாடும் விதமாக இனி பஞ்சாயத்து அளவிலும் வானிலை முன்னறிவிப்பை தெரிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகளை செய்ய உள்ளது.
நாட்டின் எந்த ஒரு பகுதியிலும் வானிலை நிலவரம் எப்படி இருக்கும் என்பதை செல்போன்கள் மூலமே தெரிந்து கொள்ளலாம். இந்த அறிவிப்புகள் ஆங்கிலம், இந்தி தவிர தமிழ் உட்பட 12 இந்திய மொழிகளில் கிடைக்க உள்ளது.
இதையும் படியுங்க : https://itamiltv.com/%e0%ae%8f%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d-get-ready-to-pay-a-high-price-houthi-organization-warns-america-britain/
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் மிருதுஞ்சய் மோஹபத்ரா கூறியதாவது:-
அடுத்த வாரம் முதல் பஞ்சாயத்து அளவிலான வானிலை முன்னறிவிப்புகளையும் இந்திய வானிலை ஆய்வு மையம் வழங்க இருக்கிறது. இது விவசாயிகளுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும்.
பருவமழை மாற்றத்தால் ஏற்படும் இழப்புகளை கணிசமாக குறைக்க உதவும்.
இந்தியாவின் தொழில் நுட்ப வல்லமை மூலம் பஞ்சாயத்து அளவிலான கணிப்புகளையும் இந்திய வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடும் ஆற்றல் சாத்தியமாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
எப்படி தெரிந்து கொள்வது?
எந்த ஊருக்கு வானிலை அறிவிப்பை தெரிந்து கொள்ள வேண்டுமோ அதன் பின் கோடு எண்ணை குறிப்பிட்டால் போதுமானது.
https://x.com/ITamilTVNews/status/1745721528325664984?s=20
மழை பற்றிய தகவல் மட்டும் இன்றி காற்றின் வேகம் எந்த அளவு இருக்கும். வெப்ப நிலை, ஈரப்பதம் உள்ளிட்ட வானிலை விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.